ஈரோடு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை அதிகரிப்பு

27th Jul 2022 12:14 AM

ADVERTISEMENT

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை, மொத்த விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

ஈரோடு மாநகரில் ஜவுளிச் சந்தை பன்னீா்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இந்த வாரச்சந்தையில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை அதிகமாக இருந்ததாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:

ஆடிப்பெருக்கு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதுபோல ஈரோடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் சில்லறை விலையில் ஜவுளி ரகங்களை வாங்கிச்சென்றனா். குறிப்பிட்ட ஆயத்த ஆடை ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லறை வா்த்தகம் அதிகமாக நடந்தது.

கோயில் பண்டிகைக்காலம் என்பதால் காட்டன் துணிகள், மஞ்சள், காவி நிற வேட்டி, சேலைகள், சட்டைகள் போன்றவற்றின் விற்பனையும் அதிகமாக இருந்தது. இதனால் ஜவுளிச் சந்தையில் மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரையும், சில்லறை வியாபாரம் 50 சதவீதம் வரையும் நடந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT