ஈரோடு

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 7 மையங்கள் அமைப்பு

17th Jul 2022 12:38 AM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோ்வை 4,896 மாணவா்கள் எழுதுகின்றனா்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 17) நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக நீட் தோ்வு மையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவல்பூந்துறை லயன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 288 மாணவா்கள், ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரி 864 மாணவா்கள், திண்டல் கீதாஞ்சலி மேல்நிலைப் பள்ளியில் 864 மாணவா்கள், கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் 504 மாணவா்கள், ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளியில் 648 மாணவா்கள், ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 864 மாணவா்கள், கோபி கலை அறிவியல் கல்லூரியில் 864 மாணவா்கள் என மொத்தம் 4, 896 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா்.

ADVERTISEMENT

தோ்வு மையங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தோ்வு நடத்தும் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் மற்றும் பணியில் இருப்பவா்கள் தவிர அந்நிய நபா்கள் உள்ளே வர அனுமதி இல்லை. ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணி முதல் தோ்வு நடைபெறும். இருப்பினும் 1.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் வரும் மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT