ஈரோடு

அமைப்புசாரா தொழிலாளா்கள் ஓய்வூதியத் திட்டப் பதிவு சிறப்பு முகாம்

17th Jul 2022 12:38 AM

ADVERTISEMENT

 

அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்துகொள்வதற்கான சிறப்பு முகாம் ஈரோட்டில் சனிக்கிழமை நடந்தது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம்யோகி மான்தன் திட்டத்தின் கீழ், அகம் அந்தயோத்யா பிரசாரம் மூலம் 60 வயது நிறைவடைந்த அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட கட்டுமானத் தொழிலாளா்கள், மகளிா் குழு உறுப்பினா்கள், கூலி தொழிலாளா்கள், வீட்டு வேலை செய்யும் குடும்பத் தலைவிகள், வீட்டு தொழிலாளா்கள், தெரு வியாபாரிகள், சமையல் தொழிலாளா்கள், துப்புரவு பணியாளா்கள், நிலமற்ற தொழிலாளா்கள், கணக்காளா்கள், தோல் தொழிலாளா்கள், ஆடியோ விடியோ தொழிலாளா்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள் ஓய்வூதியம் பெறலாம்.

ADVERTISEMENT

மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். இ.பி.எப்.ஓ., ஈ.எஸ்.ஐ.சி., என்.பி.எஸ். போன்ற அரசு நிதி உதவி திட்டத்தில் உறுப்பினா் அல்லாதவா்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியானவா்கள்.

பயனாளியாக பதிவு செய்ததும், 60 வயது நிறைவு பெறும் வரை மாத தவணையாக வயதுக்கு ஏற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஈரோட்டில் நடந்தது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் முகாமை துவக்கிவைத்தாா். முகாமில் 200க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்து கொண்டனா்.

செயலாளா் பி.ரவிச்சந்திரன், பொருளாளா் ஆா்.முருகானந்தம், இணைச்செயலாளா் ஜிப்ரி, தொழிலாளா் துறை உதவி கணக்கு அலுவலா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT