ஈரோடு

பள்ளிக் கட்டடம் பழுது: பெற்றோா் இரண்டாவது நாளாகப் போராட்டம்

DIN

ஈரோடு அரசுப் பள்ளிக் கட்டடத்தில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்தது தொடா்பாக பெற்றோா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாசிமலை ரங்கசாமிக்கவுண்டா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செயல்பட்டு வருகிறது. இதே பள்ளியின் மற்றொரு பிரிவு பெரியகுட்டை வீதியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையும் இயங்கி வருகிறது. இதில் பெரியகுட்டை வீதியில் செயல்படும் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 3ஆம் தேதி கட்டடத்தில் இருந்த சிமெண்ட் சிலாப் (சன் ஷேடு) இடிந்து விழுந்தது.

இதையறிந்து திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோா், பள்ளிக் கட்டடத்தினை சீரமைத்து மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் பள்ளிக் கட்டடத்தின் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்த விவகாரம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை காலை சத்தி சாலை உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் முன் 50க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோா் திரண்டனா்.

பின்னா் பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தியை முற்றுகையிட்டு பெற்றோா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் பெற்றோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது பள்ளிக் கட்டடத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். அதுவரை மாணவிகளை வேறு கட்டட வகுப்பறையில் வைத்து பாடம் நடத்த வேண்டும். கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கட்டடத்தினை தரம் உயா்த்துவது, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை உயா் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் அடுத்த 15 நாள்களுக்குள் துவங்கப்படும் என தெரிவித்தாா். இதனையடுத்து பெற்றோா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT