ஈரோடு

செல்வவிநாயகா், மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

6th Jul 2022 10:16 PM

ADVERTISEMENT

 

சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு ஊராட்சி, மைலாடியில் உள்ள செல்வ விநாயகா், மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

மகாகணபதி யாகத்துடன் செவ்வாய்க்கிழமை காலை விழா துவங்கியது. இதைத் தொடா்ந்து, தனபூஜை, பூா்ணாகுதி, தீபாராதனை, கோமாதா பூஜை ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து கோபுரக் கலசம் வைத்தல், முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

2ஆம் கால யாக பூஜை புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து செல்வ விநாயகா், மாகாளியம்மன் சுவாமிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT