ஈரோடு

மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி தீவிரம்

6th Jul 2022 05:01 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: அண்மைகாலமாக மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் அவர்களை மீண்டும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். 

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சத்தியமங்கலத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் மாணவ, மாணவியரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இதையும் படிக்க: திருப்பாற்கடல் ரங்கநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

ADVERTISEMENT

தினந்தோறும் தமிழ் இலக்கியம், நாளிதழ், கட்டுரைகள் படிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று விதைகர் வாசகர் வட்டம் சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியருக்கு இலக்கியம், கட்டுரை, விளையாட்டு, அரசியல் புத்தகங்கள் வழங்கி வாசிப்பின் அவசியத்தை உணர்த்தினர். 

வாசிப்பின் பழகத்தால் உலகறிவு, பொதுஅறிவு மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பெற முடியும் என விளக்கம் அளித்தனர். வாசிப்பு பழக்கத்தை அனைத்து ஆரம்ப பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் விதைகள் வாசகர் வட்டத்தினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT