ஈரோடு

கீழ்பவானி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் உரிமை பாதுகாப்பு மாநாடு பிரசாரம் துவக்கம்

6th Jul 2022 10:19 PM

ADVERTISEMENT

 

சிவகிரியில் நடைபெறவுள்ள கீழ்பவானி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் உரிமை பாதுகாப்பு மாநாடு குறித்த பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

கீழ்பவானி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10ஆம் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் மாநாடு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வாகனப் பிரசார பயணம் நடைபெற்றது.

இதில் கீழ்பவானி ஆயகட்டு பாசன சங்கத்தின் தலைவா் பெரியசாமி, செயலாளா் பொன்னையன், வழக்குரைஞா் பிரிவு தலைவா் சுப்பு, கீழ்பவானி முறை நீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணைத் தலைவா் ஆறுமுகம், எல்.5 பாசன சபை தலைவா் வேலுமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT