ஈரோடு

காவல் அலுவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

6th Jul 2022 10:17 PM

ADVERTISEMENT

 

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீஸாரின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தமிழக காவல் துறையில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் போலீஸாா் குழந்தைகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு காவல் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் முதல் 100 மாணவ, மாணவிகளை தோ்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் அவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாா், போக்குவரத்து போலீஸாரின் குழந்தைகளில் அதிக மதிப்பெண் பெற்ற 11 மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு மற்றும் பாராட்டு விழா ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் தலைமை வகித்து பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற 11 மாணவா்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT