ஈரோடு

ஜூலை 10 இல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

6th Jul 2022 10:17 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் 3,194 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நான்காம் அலை பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மையங்களில் வரும் ஜூலை 10 ஆம் தேதி சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இதில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 1.50 லட்சம் எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT