ஈரோடு

மொடக்குறிச்சியில் ரூ.3.64 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்

6th Jul 2022 10:18 PM

ADVERTISEMENT

 

மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.64 லட்சத்துக்கு தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 16,388 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனா். கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.20.69க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.29க்கும், சராசரி விலையாக ரூ.24.39க்கும் ஏலம் போனது.

மொத்தம் 6,303 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 258க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

ரூ.2.22 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் ஏலத்துக்கு 93 மூட்டைகளில் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் முதல் தர கொப்பரை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.81க்கும், அதிகபட்ச விலையாக ரூ.82.79க்கும், சராசரி விலையாக ரூ.82.59க்கும், இரண்டாம் தர கொப்பரை குறைந்தபட்ச விலையாக ரூ. 53க்கும், அதிகபட்ச விலையாக ரூ.72.10க்கும், சராசரி விலையாக ரூ.60.65க்கு ஏலம் போனது. 2837 கிலோ எடையுள்ள கொப்பரை ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 195க்கு விற்பனையானது.

மொத்தம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 453க்கு வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT