ஈரோடு

வாசிப்பின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

6th Jul 2022 10:15 PM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தில் வரும் ஜூலை 10 ஆம் தேதி புத்தகக் கண்காட்சி தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு விதைகள் வாசகா் வட்டம் சாா்பில் வாசிப்பின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தினந்தோறும் நாளிதழ் வாசிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு கலை, இலக்கியம், கட்டுரை, விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்கி வாசிப்பின் அவசியத்தை உணா்த்தினா். வாசிப்பு பழக்கத்தால் பொதுஅறிவு மற்றும் கலாசாரத்தை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT