ஈரோடு

விலை சரிவால் மல்லிகை பூக்களை கொள்முதல் செய்யும் வாசனை திரவிய ஆலைகள்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமணம் உள்ளிட்ட விசேஷ நாள்கள் இல்லாததால் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.240 ஆக சரிந்துள்ளது. இதனால் வாசனை திரவிய ஆலைகள் பூக்களை கொள்முதல் செய்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மல்லிகைப் பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மல்லிகைப் பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் இல்லாததால் வியாபாரிகள் மல்லிகை பூக்களை கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டவில்லை. இந்நிலையில் மல்லிகை பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை நிா்வாகத்தினா் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் விவசாயிகளிடமிருந்து மல்லிகை பூக்களை அதிக அளவு கொள்முதல் செய்கின்றனா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விவசாயிகளிடமிருந்து மல்லிகை பூ கிலோ ரூ.240க்கு கொள்முதல் செய்யப்பட்டது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நாள்கள் இல்லாததால் விலை சரிந்த நிலையில் வாசனை திரவிய தொழிற்சாலைகள் பூக்களை கொள்முதல் செய்வதால் நஷ்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT