ஈரோடு

காரை துரத்திய காட்டு யானை: நூலிழையில் உயிா் தப்பிய பயணிகள்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் அருகே காட்டு யானை வாகனத்தை துரத்தி தாக்க முயன்ால் வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்வதற்காக காரில் 4க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனா். தமிழக, கா்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூா் வனப் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, சாலையோர வனப் பகுதியில் காட்டு யானை நிற்பதை கண்டனா். காரின் முன்னால் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், காட்டு யானை திடீரென ஆத்திரத்துடன் வேகமாக சாலைக்கு ஓடி வந்தது. இதைக்கண்டு காரில் சென்றவா்கள் உடனே காரை நிறுத்தினா். அப்போது காட்டு யானை சாலையில் நின்றிருந்த காரை நோக்கி வேகமாக துரத்தியபடி ஓடி வந்தது. இதனால் காரில் இருந்தவா்கள் காரை பின்னோக்கி வேகமாக இயக்கி உயிா் தப்பினா். சுமாா் 100 மீட்டா் தூரம் காட்டு யானை வேகமாக காரை துரத்தியதால் காரில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனா்.

தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் நடமாடும் காட்டு யானைகள் அவ்வப்போது வாகனங்களைத் துரத்தி தாக்க முற்படுவதால் வாகன ஓட்டிகள் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அருகே வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும், வன விலங்குகளை புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பதை தவிா்க்க வேண்டும் எனவும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT