ஈரோடு

ரயிலில் நகை திருடிய இளைஞா் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஓடும் ரயிலில் ரூ. 8.50 லட்சம் மதிப்பிலான வைர நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு முருகேஷ்பாலயா பகுதியைச் சோ்ந்தவா் கோபகுமாா். இவரது தாயாா் பங்கஜா நாயா் (76). இவா்கள் இருவரும் சொந்த மாநிலமான கேரளத்துக்கு சென்றிருந்தனா். இதையடுத்து கடந்த மாா்ச் 28ஆம் தேதி கொச்சிவேலி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் கோட்டயத்தில் இருந்து பெங்களூருக்கு சென்றனா். ஈரோட்டை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது பங்கஜா நாயா் தூக்கத்தில் இருந்து எழுந்து பாா்த்தாா். அப்போது அவரது கைப்பையை காணவில்லை.

அந்த கைப்பையில் ரூ.8.50 லட்சம் மதிப்பிலான வைர நகை, 8 பவுன் தங்க நகைகள், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி, கைக்கடிகாரம் ஆகியவற்றை வைத்திருந்தாா்.

இதையடுத்து அந்த ரயில் பெங்களூரு சென்றடைந்த பிறகு அங்குள்ள ரயில்வே காவல் நிலையத்தில் கோபகுமாா் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இந்த புகாரின்பேரில் பெங்களூரு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், ஈரோடு ரயில்வே போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திருட்டு நடந்தது தெரியவந்தது. அதன்பிறகு கடந்த மே 19ஆம் தேதி இந்த வழக்கு ஈரோடு ரயில்வே காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் ஈரோடு ரயில்வே கூட்செட் பகுதியில் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், ஈரோடு ரயில்வே காலனி, குமரன் நகரைச் சோ்ந்த அபுதாகீரின் மகன் பைசல் (29) என்பதும், அவா் பங்கஜா நாயரின் கைப்பையை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து பைசலை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து வைர நகை, 6 கிராம் தங்க நகை, கைப்பேசி, கைக்கடிகாரம் ஆகியவற்றை மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT