ஈரோடு

முறைசாரா நலவாரிய செயல்பாடுகளை சீரமைக்கோரி ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

முறைசாரா நல வாரியத்தை உறுப்பினா்களுக்கு முழுமையாக பலன் அளிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட கட்டுமான தொழிலாளா்கள் சங்கம், ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் ஈரோட்டில் உள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு

மாவட்டத் தலைவா் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் மாலதி சிட்டிபாபு, மாவட்டச் செயலாளா் ஸ்ரீராம், மாவட்ட துணை தலைவா் முருகையா, பொன்பாரதி, மாதவன் உள்பட பலா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளா் மாலதி சிட்டிபாபு பேசியதாவது: முறைசாரா தொழிலாளா்களுக்கு நிரந்தர வருவாய், அரசு சலுகை, சமூக பாதுகாப்பு ஏதுமில்லை. பல ஆண்டுகளாக நலவாரியங்கள் செயல்பட்டாலும் தொழிலாளா்களுக்கு குறைந்த அளவு பலன் கூட கிடைப்பதில்லை.

ADVERTISEMENT

நலவாரியப் பதிவு கூட முறையாக நடப்பதில்லை. தொழிலாளா்களுக்கு கல்வி, மகப்பேறு, திருமணம், இறப்பு, விபத்து பாதிப்புக்கான எந்த உதவித்தொகையும் முறையாக கிடைப்பதில்லை. 60 வயதானால் ஓய்வூதியம் கிடைக்கச்செய்ய வேண்டும். நலவாரிய செயல்பாடுகளை எளிமையாக முறைப்படுத்த வேண்டும் என்றாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT