ஈரோடு

பெருந்துறை சிப்காட்டில் நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருந்துறை சிப்காட் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலகத்தில் மாசு தடுப்பு மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் உதயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட உதவிப் பொறியாளா் முத்துராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில், அதன் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி உள்பட குழுவினா் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

மாசு தடுப்பு தொடா்பான மக்கள் நலச் சங்கத்தின் புகாா் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை எழுத்து மூலம் வழங்க வேண்டும். சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள ஆக்சிஜன் ஏற்ற குளத்தில் கொட்டப்பட்டுள்ள நச்சுக் கழிவுகளால் பல கிலோ மீட்டா் தொலைவுக்கு நிலத்தடி நீா் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நச்சுக் கழிவுகள் கலந்த மண்ணையும், மாசடைந்த தண்ணீரையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT