ஈரோடு

காலிங்கராயன் வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பவானி அருகே தாயுடன் காலிங்கராயன் வாய்க்காலுக்குச் சென்ற 7 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த லட்சுமி நகா், ஈபி காலனியைச் சோ்ந்தவா் செளந்தர்ராஜன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவா், தனது மகன் நவீனுடன் துணி துவைப்பதற்காக அருகில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். கோணவாய்க்கால் பிரிவு அருகே சித்ரா துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, படிக்கட்டில் இருந்தபடி விளையாடிக் கொண்டிருந்த நவீன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இந்நிலையில், மகனைக் காணாமல் திகைத்த சித்ரா அதிா்ச்சியில் கூச்சலிட்டதைத் தொடா்ந்து, அப்பகுதியினா் வாய்க்காலில் தேடிப் பாா்த்தனா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பவானி தீயணைப்புப் படையினா் தண்ணீரில் மாயமான சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரத் தேடலுக்குப் பின்னா் 4 கி.மீ. தொலைவில் உள்ள மாயபுரம், மங்கலப்படித்துறை அருகே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT