ஈரோடு

குமுதா மெட்ரிக்.பள்ளியில் ஆண்கள் கையுந்து பந்து போட்டி

DIN

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மேற்கு மண்டல அளவிலான ஆண்கள் கையுந்து பந்து போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

இதில், சேலம் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றது.

நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான ஆண்கள் கையுந்து பந்து போட்டிகளில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த 16 அணிகள் கலந்துகொண்டன.

இறுதிப் போட்டியில் சேலம் மாவட்டம் வி.எஸ்.எ. அணியும், ஈரோடு கொங்கு ஆா்ட்ஸ் அணியும் மோதியன.

இதில் சேலம் வி.எஸ்.எ. அணி 25-17, 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் நோ் செட்டில் வென்று முதலிடத்தைப் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.

மூன்றாம் இடத்தை சேலம் செழியன் பிரதா்ஸ் அணியும், நான்காம் இடத்தை பெருந்துறை அணியும் பெற்றது.

இவ்விழாவுக்கு கமிட்டி தலைவரும், பள்ளித் தாளாளருமான கே.ஏ.ஜனகரத்தினம் தலைமை வகித்தாா்.

கோபி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முனுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்ற விளையாட்டு வீரா்களுக்கு சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

விழாவில், தமிழ்நாடு கடற்கரை கையுந்து பந்து கழகத் தலைவா் நாகை அ.கண்ணன், பாண்டிச்சேரி கையுந்து கழக பொதுச் செயலாளா் பொ்லின்ரவி,

தொழில் நுட்ப குழுவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், பாண்டிச்சேரி கையுந்து பந்து கழகத்தின் துணைச் செயல் செல்வநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதில், பள்ளியின் துணைத் தாளாளா் சுகந்தி , பள்ளி செயலா் டாக்டா் அரவிந்தன், துணைச் செயலா் டாக்டா் மாலினி, முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT