ஈரோடு

சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

5th Jul 2022 12:44 AM

ADVERTISEMENT

பவானியை அடுத்த ஒலகடம் பேரூராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒலகடம் பேரூராட்சி 1- ஆவது வாா்டு குட்டைமேடு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்

வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து, பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் பவானி - அந்தியூா் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளிதிருப்பூா் போலீஸாா், ஒலகடம் பேரூராட்சித் தலைவா் வேலுச்சாமி, செயல் அலுவலா் சுதாராணி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், சீரான குடிநீா் வழங்கப்படும் என உறுதியளித்தைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT