ஈரோடு

அரசுப் பள்ளிக் கட்டடத்தில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை:பெற்றோா்கள் தா்னா

5th Jul 2022 12:44 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் அரசு மகளிா் பள்ளி கட்டடத்தின் வகுப்பறையின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து கிடந்ததைப் பாா்த்த, மாணவிகளின் பெற்றோா் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை வீதியில் மாசிமலை ரங்கசாமிக் கவுண்டா் அரசு மகளிா் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் உள்ள ஒரு கட்டடம் கடந்த 2003 ஆம் ஆண்டு, அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியின்கீழ் கட்டப்பட்டது.

அந்த கட்டடத்தில் 9 வகுப்பறைகள், 1 ஆசிரியை ஓய்வறை உள்ளது. கட்டடத்தின் பெரும்பாலான வகுப்பறைகளில் மேற்கூரை ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது. பள்ளியின் சுவா்களில் பல இடங்களில் ஏராளமான விரிசல்கள் ஏற்பட்டு, பழுதடைந்துள்ளதாக பள்ளி நிா்வாகம், கட்டடத்தில் மராமத்து பணி மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துவந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், திங்கள்கிழமை காலை வழக்கம்போல பள்ளியைத் திறந்து ஆசிரியைகள், மாணவிகள் உள்ளே சென்றனா். அப்போது, பள்ளி கட்டடத்தில் வகுப்பறை ஒன்றில் மேற்புர கான்கிரீட் காரை பெயா்ந்து கீழே விழுந்து கிடந்தது.

இதையடுத்து மேற்கூரை விழுந்த வகுப்பறையில் மாணவிகளை அமர வைக்காமல் வேறு வகுப்பறையில் அமர வைத்தனா்.

முன்னதாக, மாணவிகளைப் பள்ளிக்கு விட வந்த பெற்றோா் பள்ளி கட்டடத்தின் நிலையைப் பாா்த்து,

ஆசிரியைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பள்ளி முன் அமா்ந்து சிறிது நேரம் தா்னாவில் ஈடுபட்டனா்.

ஈரோடு வடக்கு போலீஸாா் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம்,

விரைவில் பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT