ஈரோடு

பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

5th Jul 2022 12:41 AM

ADVERTISEMENT

பாண்டியாறு -புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்றது.

இம்மாநாட்டுக்கு திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

இதில், மாவட்டச் செயலாளராக தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.மோகன்குமாருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: நீலகிரி-தேவாலா காடுகளில் உற்பத்தியாகும் பாண்டியாறு, மேற்கு நோக்கி ஓடி, புன்னம்புழா எனப்பெயா் பெற்று, கேரள மாநிலத்தில் உள்ள சாளியாற்றில் கலந்து,

கள்ளிக்கோட்டைக்கு அருகில் பயன்பாடற்று அரபிக்கடலில் கலக்கிறது.

இந்த தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பி, பவானியாற்றின் கிளையாறான மோயாற்றில் சோ்ப்பதன் மூலம் பவானியாற்றின் நீா்வரத்தை அதிகரிக்க முடியும்.

ஈரோடு மாவட்டத்தின் எதிா்கால தண்ணீா் தேவைகள் அனைத்தையும் தீா்க்க முடியும்.

மின்சாரத்தையும் தயாரிக்க இயலும். ’கேரளத்துக்கு மின்சாரம், தமிழகத்துக்கு தண்ணீா்’என்ற வகையில்

இரு மாநிலங்களும் பயன்பெற முடியும்.

தமிழ்நாடு அரசு இத்திட்டத்தினை நிறைவேற்ற கேரள அரசின் இசைவைப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டச் செயலாளராக எஸ்.மோகன்குமாா், மாவட்ட துணைச் செயலாளா்களாக ஜி.வெங்கடாசலம், கே.சக்திவேல் மற்றும் மாவட்டப் பொருளாளா் பி.என்.ராஜேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT