ஈரோடு

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: வேளாளா் மெட்ரிக். பள்ளி மாணவி முதலிடம்

DIN

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த வேளாளா் மெட்ரிக். பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் மாணவா்களுக்கான செஸ் போட்டியை நடத்த உத்தரவிட்டது. அதனடிப்படையில், ஈரோடு மாவட்ட செஸ் சா்க்கிள் மற்றும் அகில இந்திய செஸ் பெடரேஷன் சாா்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் அண்மையில் ஈரோடு கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சுமாா் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். அதில் 54 மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் வேளாளா் மெட்ரிக். பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்வேதா முதலிடம் பெற்றாா்.

இதற்காக வழங்கப்பட்ட கோப்பையை அவா் பள்ளித் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் மற்றும் முதல்வா் கே.ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியா்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.

அகில உலக செஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழக அரசு சாா்பில் நடைபெறும் மாணவா்களுக்கான மாநில அளவிலான போட்டியில் ஸ்வேதா பங்கேற்கிறாா். மேலும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பும் தமிழக அரசால் அந்த மாணவிக்கு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT