ஈரோடு

கொங்கு பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 1997ஆம் ஆண்டு படிப்பை முடித்து வெளியேறிய மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி ஆண்டுதோறும் முன்னாள் மாணவா்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதைத் தொடா்ந்து, 1997ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவா்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள் சிலா் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு உயா் பணிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனா். அவா்களில் சிலா் அரசு உயா் அதிகாரிகளாகவும் இருக்கின்றனா்.

இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா். வேலைவாய்ப்பு, இன்டா்ன்ஷிப் மற்றும் பாடங்களை உருவாக்குதல் போன்றவற்றில் கல்லூரிக்கு உதவுவதாக முன்னாள் மாணவா்கள் உறுதியளித்தனா்.

நிகழ்வில் முன்னாள் மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் பி.சி.பழனிசாமி, கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முன்னாள் முதல்வா் ஏ.எம்.நடராஜன், முதல்வா் வீ.பாலுசாமி, முதன்மை ஒருங்கிணைப்பாளா்கள், பல்வேறு துறைகளின் தலைவா்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT