ஈரோடு

மலைவாழ் மக்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்

3rd Jul 2022 11:26 PM

ADVERTISEMENT

 

அந்தியூரை அடுத்த பா்கூா் ஊராட்சி, தாமரைகரையில் மலைவாழ் மக்களுக்கான கயிறு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

பாசம் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் மத்திய அரசின் கயிறு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தொழில் மைய ஆய்வாளா் பிரபு தலைமை வகித்தாா். பாசம் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்.மூா்த்தி வரவேற்றாா். தாமரைக்கரை வனச் சரக அலுவலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். தஞ்சாவூா் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மைய அலுவலா் கே.சத்தியன் பேசினாா்.

நாா் சாா்ந்த பயிற்சிகள் குறித்து அலுவலா் முரளிதரன் விளக்கிக் கூறினாா். பா்கூா் ஊராட்சி வாா்டு உறுப்பினா் செல்வராஜ், கயிறு வாரிய அலுவலா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பா்கூா் மழைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயா்வதற்கு கயிறு வாரியம் செய்யும் உதவிகள், மாவட்ட தொழில் மையம் உதவி மூலம் வழிகாட்டுதல், கடன் பெறுதல் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT