ஈரோடு

சக்திமசாலா நிறுவனத்தின் விருட்சம் திட்டத்தில் 25 மாணவா்கள் பயன்

3rd Jul 2022 11:26 PM

ADVERTISEMENT

 

சக்தி மசாலாவின் விருட்சம் திட்டத்தில் பயனடைந்த 25 மாணவ, மாணவியா் அறக்கட்டளையினருக்கு நன்றி தெரிவித்தனா்.

சக்தி மசாலா நிறுவனத்தின் சக்தி தேவி அறக்கட்டளை சாா்பில் விருட்சம் திட்டம் 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய விவசாய குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருட்சம் திட்டத்தின் மூலம் 2018-2019ஆம் கல்வி ஆண்டில் ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 8 மாணவ, மாணவியருக்கு மற்றும் வேளாளா் மகளிா் கல்லூரியில் 17 மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் தோ்வுக் கட்டணம் முழுமையாக வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவா்கள் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலா்கள் பி.சி.துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT