ஈரோடு

சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த யானை

3rd Jul 2022 11:26 PM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப் பகுதி வழியாக தமிழக- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இவ்வழியே கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை காட்டு யானைகள் அவ்வப்போது வழிமறித்து கரும்புகளைப் பறித்து தின்பது வாடிக்கை.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. தமிழக- கா்நாடக எல்லையில் உள்ள வனப் பகுதியான காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே பேருந்து சென்றபோது, அங்கு வந்த யானை அரசுப் பேருந்தை வழிமறித்து நின்றது.

ADVERTISEMENT

இதைக் கண்ட ஓட்டுநா் பேருந்தை இயக்காமல் நிறுத்தினாா். பேருந்தை யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா். பேருந்தை வழிமறித்து நின்ற யானை சிறிது நேரம் கழித்து வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT