ஈரோடு

பெருந்துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்

3rd Jul 2022 11:26 PM

ADVERTISEMENT

 

சென்னை ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை, தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஈரோடு மாவட்டம் மாற்றுத் திறனுடையோா் நலச் சங்கம் சாா்பில் 10ஆம் ஆண்டு சுயம்வரம் விழா பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் சிம்மச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் பொன்னுசாமி, மாநிலத் துணைத் தலைவா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் வெங்கடாச்சலம், முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறன் அல்லாதவா்கள், கணவன் மற்றும் மனைவியை இழந்தவா்கள், கணவன், மனைவியால் கைவிடப்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ரூ. 6,000 மதிப்புள்ள 10 சக்கர நாற்காலிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. சுயம்வரம் விழாவில் 9 தம்பதிகள் தோ்வாகினா். இவா்களுக்கு சென்னையில், முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சாா்பாக இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும்.

இதில், தமிழ்நாடு உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ராகுல் உள்பட பலா் கலந்து கொண்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT