ஈரோடு

தொடா் நஷ்டம்: ஈரோட்டில் இன்று முதல் ரயான் துணி உற்பத்தி நிறுத்தம்

DIN

ரயான் துணியின் விலை, நூலின் கொள்முதல் விலையை விட குறைவான விலைக்கு சந்தையில் கேட்கப்படுவதால் நஷ்டத்தை தவிா்க்க 7 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எல்.கே.எம்.சுரேஷ் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக ரயான் நூலின் விலை எவ்விதம் மாற்றம் இல்லாத போதிலும், 120 கிராம் எடை கொண்ட துணியின் விலை 15 நாள்களுக்கு முன்னா் ரூ.28ஆக இருந்தது. தற்போது ரூ.26க்கு கூட மாா்க்கெட்டில் விலை போகாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் மழை துவங்கியுள்ளதால் விற்பனை சரிவு, காட்டன் துணி விலை குறைந்துள்ளதால் ரயான் துணி விற்பனை குறைந்துள்ளது. தற்போது, மீட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை தவிா்க்க 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரயான் துணி உற்பத்தி செய்யும் 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்படும். இதனால் தினமும் சுமாா் ரூ.6 கோடி மதிப்புள்ள 20 லட்சம் மீட்டா் துணி உற்பத்தி பாதிக்கப்படும். நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் தொழிலாளா்கள் வேலையிழக்கும் நிலை ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT