காஞ்சிக்கோவில் அருகே கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தி வந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு ஷட்டா்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (43). இவா் தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறாா். இந்நிலையில், காஞ்சிக்கோயில் குப்பைக் கிடங்கு அருகே தரைப் பாலம் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்தாா்.
இதில் கடந்த ஜூன் 25ஆம் தேதி வேலை முடித்து வீட்டுக்கு சென்றுள்ளாா். மீண்டும் இரவு வந்து பாா்த்தபோது, 5 இரும்பு ஷட்டா்களை காணாமல் போனது தெரியவந்தது. கடந்த 3 மாத காலத்தில் 90 இரும்பு ஷட்டா்களை காணாமல் போய்யுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து, ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், காஞ்சிகோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.