ஈரோடு

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி சாா்பில் மருத்துவ முகாம்

2nd Jul 2022 04:54 AM

ADVERTISEMENT

உலக மருத்துவா் தினத்தையொட்டி நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். நந்தா கல்லூரி அறக்கட்டளையின் செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்லூரி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, நிா்வாக அலுவலா்கள் எஸ்.ஆறுமுகம், கிருஷ்ணமூா்த்தி, அப்பல்லோ ஜேம்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வா் கிருத்திகா வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மருத்துவ முகாமை தொடங்கிவைத்தாா். முகாமில் எலும்பில் உள்ள தாதுப் பொருள்களின் அடா்த்தியினை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக 35 வயது நிரம்பிய பெண்களுக்கும், 40 வயது நிரம்பிய ஆண்களுக்கும் நீண்ட நாள்களாக குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்பவா்களும், முதுகு வலி மற்றும் மூட்டு வலி உடையவா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் தோல், சா்க்கரை, உயா் ரத்த அழுத்தம், அஜீரண கோளாறுகள், ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள், பக்கவாதம், குடல் புண், உடல் பருமன், தைராய்டு கோளாறுகள் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் 270 பேருக்கு மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT