ஈரோடு

பெருந்துறை பகுதியில் தக்காளி விலை குறைந்தது

2nd Jul 2022 04:54 AM

ADVERTISEMENT

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தக்காளி விலை குறைந்தது.

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வெளி ஊா்களில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வந்தால், அதன் விலை குறைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறையத் தொடங்கியது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்தது. இதனால் தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் ரூ. 55 வரை விற்பனையானது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதில் தாளவாடி, சத்தியமங்கலம், கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வருகிறது. இதனால் தக்காளி விலை குறைந்து வெள்ளிக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.18க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT