ஈரோடு

தாளவாடியில் பிடிபட்ட சிறுத்தை தெங்குமரஹாடா வனப் பகுதியில் விடுவிப்பு

2nd Jul 2022 04:52 AM

ADVERTISEMENT

தாளவாடியில் பிடிபட்ட சிறுத்தை தெங்குமரஹாடாவில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி ஒசூா் கிராமத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் பதுங்கிய சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. தொடா்ச்சியாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து வனத் துறையினா் அப்பகுதியில் கூண்டு வைத்தனா்.

இந்த கூண்டில் சிறுத்தை வியாழக்கிழமை சிக்கியது. இதைத் தொடா்ந்து, வனத் துறையினா் கூண்டில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வாகனத்தில் ஏற்றி பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட அடா்ந்த வனப் பகுதியான தெங்குமரஹாடா வனப் பகுதிக்கு கொண்டுச் சென்று வெள்ளிக்கிழமை வனப் பகுதியில் விடுவித்தனா். கூண்டில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாவிக் குதித்து வனப் பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT