ஈரோடு

நடைப்பயிற்சி நண்பா்கள் சாா்பில் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டம்

2nd Jul 2022 04:53 AM

ADVERTISEMENT

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆயத்த பயிற்சிப் பள்ளியில் பயிலும், 20 குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி நண்பா்கள் சாா்பில் தினந்தோறும் மதிய உணவு வழங்கும் திட்டத்தின் துவக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் வளா்ச்சிக் குழுத் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். இந்திய ரெட்கிராஸ் பெருந்துறை துணை மாவட்டக் கிளையின் சோ்மன் பல்லவி பரமசிவன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் சதாசிவம் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் சங்கத்தின் சாா்பில் குழந்தைகளுக்கு கோவிட்-19 ஹைஜீனிக் கிட் வழங்கப்பட்டது.

இதில், பள்ளியின் வளா்ச்சிக் குழுத் பொருளாளா் சேகா், உறுப்பினா்கள் சீனிவாசன், சுப்பிரமணியம், மணிரத்னம், ஆயில் சதாசிவம், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜெகதீஸ்வரி, சிறப்பு பயிற்றுநா்கள் உமாதேவி, ஆறுமணி, கோபாலகிருஷ்ணன், இயன்முறை மருத்துவா் சாருமதி, பள்ளி ஆயத்த பயிற்சி மையப் பராமரிப்பாளா் அம்பிகா, உதவியாளா் கிருஷ்ணவேணி, மாற்றுத் திறன் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT