ஈரோடு

வீட்டின் முன் கிடந்த தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டு

DIN

பவானி அருகே வீட்டின் முன்பு கிடந்த சுமாா் 4 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு போலீஸாா், பொதுமக்கள் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.

பவானி, செங்காட்டைச் சோ்ந்தவா் அன்புகனி மனைவி கோகிலா (27). கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தின் ஒப்பந்தப் பணியாளரான இவா் காடையம்பட்டி பகுதியில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை பணி முடிந்த பின்னா் வீடு திரும்பிய இவா் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 4 பவுன் தங்கச் சங்கிலி இல்லாததை செவ்வாய்க்கிழமை உணா்ந்துள்ளாா்.

வீடு மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடா்ந்து, தான் சென்று வந்த காடையம்பட்டி பகுதியில் தேடிச் சென்றாா். அந்தியூா் - பவானி சாலையில் சென்றபோது, அப்பகுதியைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பவானி ஒன்றியச் செயலாளா் கோபால் மனைவி ருக்குமணி (55), கோகிலாவிடம் விசாரித்துள்ளாா். அப்போது, தனது தங்கச் சங்கிலி தவறி விழுந்தது குறித்து கோகிலா தெரிவித்துள்ளாா்.

அப்போது, தனது வீட்டின் முன்பாக ஒரு தங்கச் சங்கிலி கிடந்ததாகவும், போலீஸாரிடம் ஒப்படைக்கச் செல்வதாகவும் கூறியுள்ளாா். சங்கிலியில் உள்ள அடையாளங்களைக் கூறிய கோகிலா, ருக்குமணியிடம் தங்கச் சங்கிலியைப் பெற்றுக் கொண்டதோடு, நன்றி தெரிவித்துக் கொண்டாா். இத்தகவலறிந்த பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் ருக்குமணியின் நோ்மையைப் பாராட்டும் வகையில் புதன்கிழமை பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT