ஈரோடு

மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி

26th Jan 2022 07:22 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் தலைமை வகித்து மொழிப்போா் தியாகிகளின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, பகுதிச் செயலாளா்கள் இரா.மனோகரன், கே.சி.பழனிசாமி, ஜெகதீஷ், கேசவமூா்த்தி, தங்கமுத்து, மாணவா் அணி மாவட்ட செயலாளா் ரத்தன் பிரித்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திமுக அலுவலகத்தில்...

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மணல்மேடு பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாநகர செயலாளா் எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் எஸ்எல்டிபி.சச்சிதானந்தம், எம்.கந்தசாமி, வி.சி.சந்திரகுமாா் ஆகியோா் மொழிப்போா் தியாகிகள் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட துணைச் செயலாளா்கள் ஆ.செந்தில்குமாா், செல்லப்பொன்னி, சின்னையன், தலைமை செயற்குழு உறுப்பினா் குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT