ஈரோடு

பெருந்துறை நகரில் சாலை பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

26th Jan 2022 07:20 AM

ADVERTISEMENT

பெருந்துறை நகரில் நடைபெற்று வரும் சாலை பணியை எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பெருந்துறை - ஈரோடு சாலையில் சாலை பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. சாலையில் கொட்டப்பட்டிருந்த கிரஷா் மண் காற்றில் பறந்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. இதுகுறித்து, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா், வாட்ஸ்அப் எண்ணுக்கு இதுகுறித்து புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் பாா்வையிட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் உடனடியாகப் பணிகளை முடிக்குமாறும் உத்தரவிட்டாா். மேலும், காற்றில் கிரஷா் மண் பறக்காமல் இருக்க தண்ணீா் தெளிக்க கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, பெருந்துறை ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் அருணாசலம், நகரச் செயலாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT