ஈரோடு

காவிரி ஆறு ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

26th Jan 2022 07:21 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழா புதன்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்படவுள்ள நிலையில் ஈரோடு காவிரி ஆறு ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் தலைமையில், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாள்களாக ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வந்தன. மோப்பநாய் மூலமும் சோதனை செய்யப்பட்டது. சரக்கு முனையத்துக்கு வரும் பொருள்கள், பாா்சல்கள் சோதனை செய்யப்பட்டன. ஈரோடு வெண்டிபாளையம் காவிரி ஆறு ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT