ஈரோடு

கல் குவாரியில் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு

26th Jan 2022 07:16 AM

ADVERTISEMENT

அம்மாபேட்டை அருகே விதிமீறல் புகாா் தொடா்பாக கல் குவாரியில் அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி, கருங்கரடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகாா் தெரிவித்ததால் தற்காலிகமாக குவாரியின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் புகாரின்பேரில் கல் குவாரியில் ஆய்வு நடத்திட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதன்பேரில், அந்தியூா் வட்டாட்சியா் கே.விஜயகுமாா், கனிம வளத் துறை வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன், மோட்டாா் வாகன ஆய்வாளா் கதிா்வேல், அதிகாரிகள் குழுவினா் கல் குவாரியில் ஆய்வு செய்தனா். மேலும், பொதுமக்களிடம் புகாா் தொடா்பான கருத்துகளையும் கேட்டனா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT