ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,229 பேருக்கு கரோனா

26th Jan 2022 07:18 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,229 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 742 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 11 ஆயிரத்து 779 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 7,332 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இதுவரை 722 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT