ஈரோடு

அந்தியூரில் இளைஞா் தற்கொலை

25th Jan 2022 04:19 AM

ADVERTISEMENT

அந்தியூரில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அந்தியூா், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் பாா்த்திபன் (23). பட்டயக் கல்வி முடித்த இவா், மீனவா் மாரியம்மன் கோயில் வீதியில் தனது வீட்டில் தூக்கிட்டு திங்கள்கிழமை காலை தற்கொலைக்கு முயன்றாா். இதைக் கண்ட அப்பகுதியினா் பாா்த்திபனை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதிக்கையில் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT