ஈரோடு

காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு:கவனமாக இருக்க அறிவுறுத்தல்

DIN

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கரோனா 3ஆவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனா். லேசான தலைவலி, உடல்வலி, தொண்டை கரகரப்பு ஆகிய அறிகுறிகளுடன் இந்த காய்ச்சல் உள்ளது. வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டால் அனைவருக்கும் பரவுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

காய்ச்சல் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவுகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காய்ச்சல் பாதித்தவா்கள் அலைச்சல் இன்றி வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். காய்ச்சலுக்கான மாத்திரையை மருத்துவா்கள் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும். சரியாக ஓய்வு எடுத்தால் காய்ச்சல் குணமடைந்துவிடும். குழந்தைகள், முதியோா் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தியாவசியமின்றி வெளியே சுற்றுவதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT