ஈரோடு

விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்

DIN

விளை நிலங்களுக்குள் புகுந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளது.

இந்நிலையில், பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பசுவபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டன. பகல் நேரங்களில் விவசாய தோட்டப் பகுதியில் யானைகள் முகாமிட்டதால் அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து பவானிசாகா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி தனியாா் தோட்டத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் சுமாா் 2 மணி நேரம் போராடி அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இதில், பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், எனது தோட்டத்தில் 300 தென்னை மரங்கள் இருந்தது. கடந்த மாதம் அதில் 250 மரங்களை யானை சேதப்படுத்தியது. மீதமுள்ள 50 மரங்களையும் யானை முறித்து சேதப்படுத்தியதால் வருவாய் இழந்து தவித்து வருகிறோம் என்றாா்.

வனப் பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் மீண்டும் இப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளதால் வனத் துறையினா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT