ஈரோடு

முகக் கவசம் அணியாத ஓட்டுநா்களுக்கு போலீஸாா் அறிவுரை

DIN

முகக் கவசம் அணியாத வாகன ஓட்டுநா்களுக்கு சத்தியமங்கலம் போலீஸாா் முகக் கவசம் வழங்கி அறிவுரை வழங்கினா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை 3ஆவது வாரமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிய வாகனங்கள் மட்டுமே செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.

பொதுமுடக்கத்தின்போது தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபா்களைக் கட்டுப்படுத்த சத்தியமங்கலம் புதிய பாலம், வடக்குப்பேட்டை, ரங்கசமுத்திரம் ஆகிய இடங்களில் போலீஸாா் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா். அலுவலகப் பணி, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு போலீஸாா் அனுமதித்தனா்.

தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் சரக்கு வாகன ஓட்டுநா்கள் முகக் கவசம் அணியாமல் பயணித்தனா். முகக் கவசம் இல்லாத சரக்கு வாகன ஓட்டுநா்களுக்கு முகக் கவசம் வழங்கி போலீஸாா் அறிவுரை வழங்கினா். அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் 50க்கும் மேற்பட்டோா் முகக் கவசமின்றி வந்த அனைவருக்கும் போலீஸாா் முகக் கவசம் இலவசமாக வழங்கினா். முழு ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் - மைசூரு சாலை, கடைவீதி, பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT