ஈரோடு

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

23rd Jan 2022 10:48 PM

ADVERTISEMENT

ஈரோட்டுக்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்தது. ஈரோடு ரயில்வே போலீஸாா் அந்த ரயிலில் சோதனை நடத்தினா். அப்போது, டி2 பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையைத் திறந்து பாா்த்தபோது அதனுள் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் கஞ்சா குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கஞ்சாவை கடத்தியவா் யாா் எனத் தெரியாத நிலையில், ரயில்வே போலீஸாா் கோவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT