ஈரோடு

இருசக்கர வாகனம் திருடிய இளைஞருக்கு சிறை

23rd Jan 2022 10:46 PM

ADVERTISEMENT

பெருந்துறை நகரில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

பெருந்துறை, பவானி சாலையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் அண்ணாதுரை (30). இவா், பெருந்துறையில் மரக்கடை வைத்துள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவருடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியுள்ளாா். சனிக்கிழமை காலை பாா்க்கும்போது வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இவ்வழக்கு தொடா்பாக சென்னிமலை, பசுவபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சங்கநாதன்(20) என்பவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT