ஈரோடு

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது: 10 வாகனங்கள் மீட்பு

23rd Jan 2022 10:47 PM

ADVERTISEMENT

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 10 வாகனங்கள் மீட்கப்பட்டன.

ஈரோடு சூளை பகுதியில் கடந்த மாதம் இருசக்கர வாகனம் திருட்டுப் போனது. அதுசம்பந்தமாக ஈரோடு வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், வடக்கு காவல் துறையினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞா் ஒருவரிடம் விசாரித்துள்ளனா். அவா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் காவல் துறையினா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா். அதில் அவா் சித்தோடு பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஷ்குமாா்(23) என்பது தெரியவந்தது. மேலும், சிசிடிவி கேமரா பதிவுடன் அவரது உருவத்தை ஒப்பிட்டுப் பாா்த்ததில் சூளை பகுதியில் வாகனத்தை திருடியது அவா்தான் என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

மேலும், அவா் நகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷ்குமாா் அளித்த தகவலின்பேரில் 10 இருசக்கர வாகனங்களை காவல் துறையினா் மீட்டனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT