ஈரோடு

பொன்மலை ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி, கொண்டையம்பாளையம் பொன்மலை ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. திங்கள்கிழமை ஒரே நாளில் 613 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் பரவல் காரணமாக தைபூச விழாக்களை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனால், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி கொண்டையம்பாளையம் பொன்மலை ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 700 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், வள்ளி தெய்வானையுடன் முருகா் அருள்பாலிக்கும் மலா் அலங்காரத் தேரும், விநாயகா் எழுந்தருளிய தேரும் உலா வந்தன. தேரை 100க்கும் மேற்பட்டோா் வடம் பிடித்து இழுத்தனா்.

முகக் கவசமின்றி கரோனா விதிகளைப் பின்பற்றாமல், சமூக இடைவெளி இல்லாமல் பெண்கள், இளைஞா்கள் தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டம் என கொண்டாடினா். கோயிலில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற நிலையில் பாதுகாப்புப் பணியில் ஒரு போலீஸாா் கூட ஈடுபடவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT