ஈரோடு

பவானியில் காலிங்கராயன் உருவச் சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

DIN

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள காலிங்கராயன் முழு உருவச் சிலைக்கு அமைச்சா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்ட நாளான தை மாதம் 5ஆம் தேதி காலிங்கராயன் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் காலிங்கராயன் முழு உருவ வெண்கலச் சிலைக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈ.ஆா்.ஈஸ்வரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவா் குறிஞ்சி என்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம் ஆகியோா் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா். இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெயகுமாா் (பெருந்துறை), பண்ணாரி (பவானிசாகா்), முன்னாள் உறுப்பினா்கள் கே.எஸ்.தென்னரசு, கே.ஆா்.சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளா் விடியல் சேகா், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா், மாநில பொதுக் குழு உறுப்பினா் கே.எம்.ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில், மாநில பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, பவானி நகரச் செயலாளா் ஸ்ரீகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், பல்வேறு பொது நல அமைப்புகள், பொதுமக்கள் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்தும், வாய்க்காலில் மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT