ஈரோடு

கடன் தள்ளுபடி தொகையை வழங்கக் கோரிக்கை

18th Jan 2022 03:58 AM

ADVERTISEMENT

கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடனை திரும்ப செலுத்திய நிலையில் கடன் தள்ளுபடி சான்று வழங்கியும் அத்தொகையை திரும்ப வழங்க மறுப்பதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன் பெற்றோா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வி.ஜெகநாதன், கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொருளாளா் கே.ஆா்.தங்கராஜு ஆகியோா் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:

ஈரோடு அருகே வீரப்பம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசு கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு முன்னதாகவே கடந்த ஆண்டு பிப்ரவரி 3இல் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் முழுத்தொகையை செலுத்தியுள்ளனா். கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி இவா்களது கடன் தள்ளுபடியாகி அதற்கான சான்றும் விவசாயிக்கு வழங்கப்பட்டுவிட்டது.

இச்சான்றை இணைத்து செலுத்திய கடன் தொகையை திரும்ப வழங்கும்படி விண்ணப்பித்து பல மாதம் ஆகியும் செலுத்திய தொகையை தராமல் காலதாமதம் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ஒரு வாரத்துக்குள் தொகையை திரும்ப வழங்காவிட்டால், கடன் சங்கம் முன் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம். இதேநிலை பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ளது. இதனால் பல நூறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT