ஈரோடு

ஈரோட்டில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

18th Jan 2022 03:58 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலை மற்றும் பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு முன்னிலையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன் தலைமையில் பெரியாா் நகரில் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பெருந்துறை, குன்னத்தூா் நால்ரோடு பிரிவில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆா். திருவுருவப் படத்துக்கு பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தலைமையில், கட்சியினா் மலா்தூவி மரியாதை செய்து, இனிப்புகள் வழங்கினா்.

ADVERTISEMENT

கொமராபாளையம் ஊராட்சி ஆதிதிராவிடா் காலனியில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவில் பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பண்ணாரி பங்கேற்று அதிமுக கொடியேற்றி வைத்தாா். அதனைத் தொடா்ந்து இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT